ஜெ
சற்று பிந்தி வெண்முரசிலே அற்புதமான ஓவியங்களைச் சண்முகவேல் வரைந்துகொண்டிருக்கிறார். அன்றாடம் வராததனால் அதை வெண்முரசு வாசகர்கள் பலர் தவறவிட்டிருப்பார்கள். சென்ற ஐந்தாறுநாட்களில் வந்த ஓவியங்கள் எல்லாமே கிளாஸ். அதிலும் உச்சகட்ட ஓவியம் நேற்றுவந்த நெருப்புநடராஜர். ஷண்முகவேல் உங்களுடைய கிரியேட்டிவிட்டியை எட்டிப்பிடிக்கும் இடம் அது. அவர் கைகளை எடுத்துக் கண்ணில் ஒற்றிக்கொள்ளவேண்டும் போலிருக்கிறது. அவரை மனமார வாழ்த்துகிறேன்
சுவாமி