அன்புள்ள ஜெ
அனல்வடிவமாக சிவனைச் சித்தரிக்கும் பாசுபதப் பகுதிகள் அற்புதமானவை. உக்ரனின் சொற்களில் ருத்ரர்களின் பிறப்பும் அவர்கள் மகாருத்ரத்தை அறிவதுமெல்லாம் இதுவரை கேட்டிராத கதைகள். ஆனால் சோதித்தபோது அவை சிவபுராணத்தில் உள்ளவை என்றும் தெரிந்தன. ஆச்சரியமாக இருந்தது.
அடிமுடி தெரியாத சிவனை பிரம்மனும் விஷ்ணுவும் அறிவதும் ஆச்சரியமான விஷயம். பிரம்மா மண்ணை படைத்தான். அவன் விண்ணை அளக்கப்போகிறான். விஷ்ணு விண்ணுருவம் கொண்டவன். அவன் மண்ணை அகழ்கிறான். இந்தக்கதையை எல்லாம் இப்படி ஆழமாக யோசித்ததே இல்லை வெண்முரசு நிகழ்த்திவைக்கிறது
ஸ்தாணுமாலயன் எஸ்