ஜெ
வெண்முரசின் சூதர்களைப்பற்றி எவராவது
ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல கட்டுரை எழுதலாமென நினைக்கிறேன். ஆரம்பத்திலே வரும் கண்
தெரியாத சூதரான தீர்க்கசியாமர் முதல் இன்றைக்கு வந்து முடிந்த சண்டர் வரை.
ஒவ்வொருவரும் ஒவ்வொருவகை. இந்தச் சண்டரை முன்னாடி பீஷ்மரை நக்கல்செய்யும்
கதாபாத்திரமாகப் பார்த்துவிட்டேன் என்ற எண்ணம் வந்தது. அனைவரும் ஒன்றுபோல
இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு தனிக்குணாதிசயமும் இருக்கிறது
சிவராஜ் .