ஜெ
மொத்த நாவலிலும்
அம்மை வந்ததுமே ஒரு பெரிய அழகு வந்துவிட்டது. சைவ மரபின் உக்கிரத்தை தணிக்கும் குளிர்மழை
அம்மைதான். அவள் கருணையுடன் வந்து நின்றபோதே எல்லாம் வேறுமாதிரி ஆகிவிட்டது. அதுவரை அர்ஜுனனும் கிராதசிவனும் பேசிக்கொண்டிருந்த
சிக்கலை எல்லாம் பூ என ஊதிவிட்டாள். த சும்மா கெட என சிவனை அதட்டி கையிலே பிள்ளையைக்கொடுத்து
சோமாஸ்கந்தராக ஆக்கிவிட்டாள்.
சிவையாகிய
காளியின் இந்த அம்மைத்தோற்றத்தை நாயன்மார்கள் பாடிப்பாடி உருகியிருக்கிறார்கள்.
ஒவ்வொரு வரியும் அன்னையை வர்ணிக்கும் அழகு கண்டு நிறைவு வந்தது
சுந்தரராஜன்