ஜெ
சகுனியை ஓநாய்
கடிக்கும் இடத்தைத்தான் நேற்று மீண்டும் வாசித்தேன். அந்த ஓநாய்க்கும் அவனுக்குமான
உரையாடலே ஒரு கனவுவெளியில் அற்புதமாக அமைந்துள்ளது. அவன் அந்தநாயை அடையாளம் கண்டுகொண்டதுமே
அது கடிக்கிறது. அது தாக்கியது என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன். தாக்கவில்லை, அது
அவனுக்குள் தன் விஷத்தை செலுத்திவிட்டது என்று இப்போது புரிகிறது
அந்தப்பாலைவன நஞ்சுதான்
இவ்வளவு ஆட்டம் காட்டுகிறதென்பது ஆச்சரியமான விஷயம். நான் வாசித்தபோது அந்த ஓநாய்தான்
கணிகராக மாறிகூடவே வந்துள்ளது என்று தோன்றியது
மகேஷ்