ஜெ,
அர்ஜுனன் குகைக்குள் [மனக்குகைதானே
அது] செல்லும்போது அங்கே கிருஷ்ணன் விருத்திரனாக இருந்தான் என்னும் ஒற்றைவரி ஒரு
பெரிய திறப்பாக இருந்தது. அவன் இந்திரனின் மகன். கிருஷ்ணன் யாதவன். இந்திரனால்
தோற்கடிக்கப்பட்ட விருத்திரன் பூர்வகுடிகளின் அரசன் அல்லது தந்தை. அவனைத்தான்
கிருஷ்ணன் தன் மூலப்பிதாமகனாகக்கொண்டிருக்கிறான். கிருஷ்ணன் தன்னை
கார்த்தவீரியனுடன் அடையாளப்படுத்திக்கொள்ளும் பல இடங்கள் உள்ளன. கார்த்தவீரியனின்
வம்சம்தானே அவன். அவனுடைய மூதாதை விருத்திரன் தான்.
அந்தப்பிதாமகனைக் கொன்ற அர்ஜுனனின்
தந்தைக்கு எதிரான போரைத்தான் கிருஷ்ணன் செய்தான். இந்திரனை அவன் யாதவர்களிடமிருந்து
அகற்றினான். அவனைத் தோற்கடித்தான். அவன் மகன் கிருஷ்ணன் பொருட்டு இந்திரனை வென்று
திரும்பி வந்து நின்றிருக்கிறான். அவன் பழங்குடிகளிடம் சென்று பாசுபதம்
வாங்கித்திரும்பும்போதுதான் கிருஷ்ணன் அவனை ஏற்று நண்பனாக ஆக்குகிறான். எத்தனை
நுணுக்கமான உள்ளோட்டங்கள் என நினைத்து வியக்கிறேன்
சத்தியமூர்த்தி