இன்றைய பகுதியில் “அட்ட உணவு” என்பது சமைத்த உணவை குறிக்கிறதா?
லோகமாதேவி
Baking - என்பதே அடுதல் என்பதன் பொருள். பொதுவாக bread, cake வகையறாக்களே நினைவுக்கு வரும். பொதுவாக அடுதல் என்பதை தீயில் நேரடியாகப் படாமல் உணவைச் சமைக்கும் முறை. தீயைக் கற்களின் அடியில் வைத்து அக்கற்களைச் சூடாக்கி அதன் மீது உணவை வைத்து சமைப்பது ஒரு வகை. தீயை எரிய விட்டு உணவை தீயின் மேல் தொங்க விட்டு தீயின் வெப்பத்தில் மட்டுமே அதை அடுவது ஒரு வகை. இன்னும் பல முறைகள் உண்டு. இவ்வகை உணவுகள் மேல் பகுதியில் பொருக்காகவும், உட்பகுதிகளில் மிக மென்மையாகவும் இருக்கும்.
அருணாச்சலம் மகாராஜன்