ஜெ,
நீங்கள் பாசுபத பூஜையிலிருந்து எடுத்த சில சடங்குகளையும் மந்திரங்களையும் வைத்துக்கொண்டு அது வேதங்களைவிடத் தொன்மையான ஒரு ஒலிசார்ந்த வேதமாக இருக்கக்கூடும் என ஊகித்துள்ளீர்கள். அதை ஓரளவு அனுமானிக்கமுடிகிறது. ஆனால் நீங்கள் கொடுத்திருக்கும் அந்தமந்திரங்களில் ஹ்ரீம் போன்றவை மட்டுமே சைவம். ஸ்ரீம் வைணவத்தின் மந்திரம். ஷாம் போன்ற மந்திரங்கள் இன்றைக்குக் குட்டிச்சாத்தன் பைரவி போன்ற தெய்வங்களுக்கு மட்டும் உரியவை. எல்லாவற்றையுமே சிவ வழிபாட்டிலே கொண்டுசென்று இணைத்துள்ளீர். இதற்கு சாஸ்திரம் உள்ளதா என்று தெரியவில்லை
மாரிமுத்து பன்னீர்செல்வம்