ஜெ,
பார்வதி சிவனைப்பற்றி
அர்ஜுனனிடம் சொல்கிறாள். “மறந்தும்
இவரிடமிருந்து சிவப்புகையை பெற்றுக்கொள்ளாதே. பெற்ற தாய் மைந்தனுக்கு
ஊட்டுவதுபோல கொஞ்சிக்கொஞ்சி நீட்டுவார். வாங்கி இழுக்கத் தொடங்கினால்
அதன்பின் உனக்குள் ஒரு சொல்லும் இருக்காது.
உறவும் கடமையும் மறக்கும். வெறும் முகில் மட்டுமே
இருக்கும்.”
வாசித்துவிட்டுச்
சிரித்தேன். ஆனால் பின்னர் அந்த யதார்த்தம் அழகாகவும் இருந்தது. என்ன இருந்தாலும் அவன்
பித்தன், பேயன். ஒரு அம்மாவாக அவள் சொல்லாமலா இருப்பாள்?
சக்திக்கும் சிவனுக்கும்
நடுவே யார் பெரியவர் என்னும் போட்டி இன்னும் முடிவடையவில்லை என்று பிள்ளையார் சொல்வதும்
அப்படித்தான்
சண்முகசுந்தரம்