Thursday, January 19, 2017

கிருஷ்ணனும் அசுரனும்




ஜெ

கிராதத்திலே விருத்திராசுரனின் கதை மட்டும் பல வடிவங்களில் பலவகையான வேறுபாடுகளுடன் வந்தது. அது ஒரு முக்கியமான கதை, அதிலிருந்து நிறையத்தொடக்கங்கள் உள்ளன என்று காட்டுவதற்காக அதைச்செய்கிறீர்கள் என நினைத்தேன். உண்மையில் அதன் சாராம்சம் என்ன என்று பார்ப்பதற்காக நான் மீண்டும் அதை வாசித்தேன். கிருஷ்ணன் விருத்திராசுரனாக வந்து அர்ஜுனன் முன் நின்றான் என்ற வரியை வாசித்தபின் எல்லாமே மாறிவிட்டது.

அவன் ஒரு மூதாதை. அந்த மூதாதை அழியவே மாட்டான். ஏனென்றால் அவன் புற்றுபோல. மண்ணுக்கு அடியில் இருப்பான். மண்ணுக்கு அடியில் இருந்து இந்திரனின் சிம்மாசனத்துக்கு அடியில் முளைத்து மீண்டும் வந்திருக்கிறான் விருத்திரன். அதுவே கிருஷ்ணன். கிருஷ்ணன் மகாநாராயவேதத்தின் அதிபதியாகிய விஷ்ணுதான். கூடவே வேதாந்தத்தின் ஆசிரியனும் கூட

ஜெயராமன்