அன்புள்ள
ஜெ
வெண்முரசு
கிராதம் தொடக்கம் முதலே ஒரு உக்கிரத்துடன் சென்றுகொண்டிருந்தது. கிராதர்களாகிய காளாமுகர்கள்
வரும் இடமெல்லாம் ஒருமாதிரி கொந்தளிக்க வைத்தன. அதேபோலத்தான் நாவல் சென்றுகொண்டிருக்கும்
என நினைத்தேன். சில இடங்களில் கொஞ்சம் வேடிக்கை எல்லாம் இருந்தது. ஜைமினியை கேலிசெய்யும்
இடங்களில் ஆனாலும் அந்தத்தீவிரம்தான் மேலே கொண்டுசென்றது
ஆனால் கடைசியில்
அம்மையப்பன் வரும் காட்சியில் எல்லா தீவிரமும் போய் அழகான இனிமை வந்துவிட்டது. முதலில்
அது வேறுபட்டுத்தெரிந்தாலும் அதுதானே சைவம் என நினைத்தேன். பல சிற்பங்களில் காலடியில்
பேயும் பூதங்களும் ஆடிக்கொண்டிருக்கும். நடுவே சிவகாம சுந்தரர் கொஞ்சிக்கொண்டிருப்பார்.
அல்லது சோமாஸ்கந்தர் அமர்ந்திருப்பர் அந்தக்காட்சியில் உள்ள யூனிட்டி வந்துவிட்டது
மரணம் அழிவு
குரூரம் எல்லாம் உலகில் உள்ளன. ஆனால் நடுவே இருப்பது சிவசக்திலயம். அதுவும் அவர்களின்
ஊடலும் கூடலுமான ஒரு லயம். அதை கிராதம் காட்டிவிட்டது. அந்தக்காட்சியில் ஒரு பெரிய
பரவசம் எனக்கு ஏற்பட்டது
மீனாட்சி
சுந்தரம்