அன்புள்ள ஜெ,
கல்பொருசிறுநுரையில் நடைபெறுவது குருக்ஷேத்திரத்தின் ஒரு சுருக்கமான வடிவம் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அதே அதிகாரச்சண்டை. சகோதரச்சண்டை முற்றழிவு. அதையும் எவராலும் தடுக்கமுடியாது. கிருஷ்ணனால் குருக்ஷேத்திரத்தையே தடுக்கமுடியவில்லை. ஆகவே இது தவிர்க்கமுடியாதது என அவர் அறிந்திருக்கலாம்.
இன்னொரு கோணம் என்னவென்றால் குருக்ஷேத்திரத்தை நடத்தி அழிவை உருவாக்கிய கிருஷ்ணனின்மேல் காந்தாரமகளிரின் சாபம் அது. அந்த சாபத்திலிருந்து அவர் மீளமுடியாது. நீ நடத்திய குருக்ஷேத்திரமே உனக்கு கூர்மையான வடிவில் திரும்பி வரட்டும் என்றுதான் சாபம். பிரபாசக்ஷேத்திரத்தில் நடைபெற்றது அதுதான்
சுவாமி