Sunday, August 9, 2020

சிலை


அன்புள்ள ஜெ

வெண்முரசில் சிலகதாபாத்திரங்களின் உடலியல்புகள் சற்று மிகையாக சொல்லப்பட்டுள்ளன என்ற எண்ணம் எனக்கு இருந்தது. இது வெண்முரசில் அதன் ஃபாண்டசி நெரேஷனால் இசைவாக இருந்தாலும் இதன் தேவை என்ன என்ற கேள்வி இருந்தது. உதாரணமாக கிருதவர்மன் தீயில் வெந்து உடல் உருகி மீள்வது. இது கொஞ்சம் உணர்ச்சித்தீவ்ரத்துக்காகச் சொல்லப்பட்டது என்று நினைத்திருந்தேன்

ஆனால் இன்றைக்கு நினைக்கும்போது கிருதவர்மன் என்ற கதாபாத்திரம் அவனுடைய குணாதிசயத்துக்கு ஏற்ற உருவத்தை அடைந்தால்தான் நினைவில் நிற்கிறான் என்று தெரிகிறது. இது காவியங்களின் இயல்பு. கதாபாத்திரங்களை அவை ரியலிஸ்டிக்காக உருவாக்கவில்லை. கதாபாத்திரங்களை அவை விக்ரகங்களாகத்தான் உருவாக்குகின்றன. விக்ரகங்கள் ஒரு உணர்ச்சியையோ தத்துவத்தையோ ஃப்ரீஸ் பண்ணி காட்டுபவை

துரியோதனன் துச்சாதனன் என்றெல்லாம் பெயர்கள் அமைவது இதனால்தான். ஒரு கதாபாத்திரத்தின் இயல்பே அவன் உடலாக பெயராக இருந்தால்தான் அவன் நினைவில் அப்படியே படிகிரான். அவனுடைய உச்சகட்ட உணர்ச்சிநிலையே நம் நினைவில் நீடிக்கிறது. கிருதவர்மன் அப்படி ஒரு கதாபாத்திரம். எரிந்து உருகியவன் அவன்


சாந்தகுமார்