அன்புள்ள ஜெ
வைதரணி என்னும் சொல்லை நான் அடிக்கடிக் கேட்டிருக்கிறேன்.
வைஷ்ணவபிராமண வீடுகளில்ச் சொல்வார்க்ள். அதன்
அர்த்தமென்ன என்று இன்றைக்குத்தன புரிந்தது. மலமும் சலமும் ஓடும் அந்த ஆறு என்ன என்று
யோசித்தேன்.
90 வயதான என் தந்தையார் கொஞ்சநாட்களுக்கு முன்னால் மறைந்தார்.
மிக ஆசாரமான வாழ்க்கை வாழ்நதவர். வைகுண்டவாசம்தான் என்றுதான் சொல்லிக்கொண்டிருப்பார்.
ஆனால் கடைசி நாட்கள் மிகக்கடுமையானவை. மலமும்சலமும்தான். தாளமுடியாமல் அதுவரை இருந்த
எல்லா பண்புகளையும் விட்டுவிட்டா. பெருமாளை வசைபாடினார். மிகவும் கீழ்மையாக நடந்துகொண்டு
மெல்லமெல்ல உயிர்விட்டார். ஆனால் சாகும்போது அப்படி ஆனதைப்பற்றி நினைத்து அவரே அழுதார்
அவர் வைதரணியிலே மாட்டிக்கொண்டார் என்று பெரியவர்கள் அன்றைக்குச்
சொன்னார்கள்.எவ்வளவு புரிந்துகொண்டு எவ்வளவு கடக்கவேண்டியிருக்கிறது
சீனு