அன்புள்ள ஜெ
வெண்முரசு நாவலில் பாலைவனச்சித்தரிப்புக்கள் எல்லாமே எப்போதும் அருமையாக வந்துகொண்டிருக்கின்றன. பீஷ்மர் செல்லும் முதல்பாலைவனம். அதுக்குப்பின்னர் சகுனி வாழ்ந்த பாலைவனம் . பூரிசிரவஸ் பார்த்த பாலைவனம். பலவகையான பாலைவனக்காட்சிகள். நீங்கள் பயணம் செய்த பாலைவனத்தின் பயணக்குறிப்புகளைப் பார்த்தேன். அவற்றிலே சுருக்கமாகச் சொல்லப்பட்டிருந்தவை இவற்றில் விரிவான அளவில் சொல்லப்பட்டிருக்கின்றன என்று தோன்றுகிறது
பாலைவனமே பொன்னிறமாகத் தெரிகிறது. அங்குள்ள மரணம்கூட அழகாகத் தெரிகிறது. பனியும் பாலையும்தான் இந்நாவலின் அழகுகள் என நினைக்கிறேன்
செந்தில்