Sunday, November 27, 2016

பைனரி



ஜெமோ சார்

கிராதம் இப்பகுதியில் மிகத்தெளிவாக அசுரர் தேவர் என்ற பைனரியை அழித்துக்கொண்டே செல்கிறது. அசுரர் தேவர்களாக ஆவது நடக்கிறது. வருணனும் குபேரனும் யமனும் அசுரப்பிறப்பு கொண்டவர்கள் என்ற வடிவமும் சரி அசுரர்களுக்கும் தேவர்களுக்குமான உறவின் கதைகளும் சரி நாம் எளிமையாகப்புராணங்களில் படிப்பதை தொடர்ச்சியாக மறுவாசிப்பு செய்யத்தூண்டுகின்றன

அசுரர்களை தேவர்தரப்பு அழித்துக்கொண்டே இருக்கிறது. அந்தப்போரில் தேவர்கள் எப்போதும் ஜெயிக்கிறார்க்ள். ஆனால் அசுரர்கள் தோற்பதே இல்லை. அசுரர்கள் ஒரு முக்கியமான தரப்பாக இந்துமதத்தின் சொல்லாடல்களுக்குள் இருந்துகொண்டே இருக்கிறார்கள்

செல்வராஜ்