ஜெயமோகன் அவர்களுக்கு
விஸ்வரூபன் என்ற கதையை இப்போதுதான் வெண்முரசுக்கு வெளியே சென்று வாசித்தேன். ரிக்வேதகாலம் முதலே இருந்துவரும் கதை என்று தெரிகிறது.
அப்படிப்பார்த்தால் மிகமிக நுணுக்கமான கதை. அதன் அர்த்தங்களை ஆன்மீகமாகவும் சமூகரீதியாகவும் ஆராய்ந்துபார்க்கலாம். அதை இன்று புரிந்துகொள்ளும்போது இன்றைக்குள்ள அர்த்தங்களைப்பற்றித்தான் பேசமுடியும். அன்றைக்கு எப்படி என்று சொல்லவே முடியாது
ஒன்று சொல்லலாம். இன்றைக்குள்ள அர்த்தப்படி இந்துமதத்தின் 3 வடிவங்கள் அவை. நாட்டார் வழிபாடு வேதவழிபாடு தியானம் அல்லது வேதாந்தம்போன்றவை என்று மூன்று. முன்றுமுகம் அதைத்தான் சொல்கிறது
அந்த அர்த்தத்தில் ஒட்டுமொத்த வெண்முரசையே வாசிக்கலாம். அப்படி ஒரு வாசிப்பைக் கட்டாயமாக ஆக்குவதுதான் உங்கள் எண்ணம் என நினைக்கிறேன். அதுதான் வெண்முரசில் இந்தப்பகுதியில் வந்துகொண்டே இருக்கிறது
ஜெயராமன்