Monday, November 21, 2016

வெய்யோன்


அன்புள்ள ஜெமோ

வெய்யோன் இப்போதுதான் முடித்தேன். வெண்முரசின் மற்றநாவல்களுக்கெல்லாம் ஒரு பிளான் இருப்பதை உணரமுடிகிறது. கண்ணனின் எட்டு மனைவிகளின் கதை இந்திரநீலம். அர்ஜுனனின் மூன்று மனைவிகளின் கதை காண்டீபம். இந்தக்கதை அப்படி இல்லாமல் அலைபாய்கிறது. இது கர்ணனின் அவமதிப்பு, அவனுக்கும் துரியோதனனுக்குமான உறவு ,நாகபாசம் கைகொள்ளுதல் என்று பலகதைகள். நடுவே தீர்க்கதமஸ் கதை ஜயத்ரதன் கதை என்று சில மீறல்கள். ஆகவே யூனிட்டி வரவில்லை

பல இடங்கள் வலுவானவை. ராதைக்கும் கர்ணனுக்குமான உறவு முறியுமிடம், துரியோதனனை கர்ணன் அந்தரங்கமாக ஆறுதல்படுத்தும் இடம். அப்படி பல இடங்கள்வந்தபடியேஉள்ளன. பொதுவாக வெண்முரசு நாவல்களில் உள்ள புனைவுத்தன்மை கொஞ்சம் இல்லாமல் யதார்த்தம் கூடிய நாவலாக உள்ளது

சாந்தகுமார்