அர்ஜூனன் நீரின் அடியில் செல்லச் செல்ல எடை கூடியதாக உணர்ந்தான் என்கிறீர்கள். நான் நீச்சல் தெரிந்தவன். நீரின் ஆழத்திற்குச் செல்லும்போது நம் எடை குறையும். கிணற்றிலிருந்து வாளியில் நீர் மொள்ளும்ப்[ஓது அவ்வாளி தண்ணீருக்கு வெளியில் வரும்போதுதான் நாம் எடையை அதிகமாக உனர்கிறோம்.
வளவதுரையன்
அன்புள்ள வளவதுரையன்
இவை மொத்தமும் உளமயக்குகள் என்றே கதை சொல்கிறது
ஆழ்கடல் நீச்சல் செய்திருக்கிறேன். ஆழத்திற்குச் செல்லும்தோறும் ஒருகட்டத்தில் நீரின் எடை நம்மை அழுத்தத் தொடங்கும். நாம் எடைமிகுந்து அசைவற்றுவிட்டோம் என உணரத்தொடங்குவோம், இது என் அனுபவம்
ஜெ