அன்புள்ள ஜெமோ
குபேரனின் நகரில் அர்ஜுனன் எதிர்கொள்ளும் மூன்றுவகை நாணயங்களை
வாசித்து ஆச்சரியம் அடைந்தேன். ஒரு பொருளுக்கு இன்னொன்றை குறியீடாக முன்வைக்கும்போது
இரும்பு. அதாவது பணம் உருவாகிறது
ஒருபொருளுக்கு ஒரு வாக்குறுறுதியை அளிக்கும்போது அது செம்பு.
அதாவது காகிதப்பணம் உருவாகிறது.
அடுத்து வெள்ளிப்பணம். அது ஓர் ஊகத்துக்கு பொருள்மதிப்பை
அளிப்பது. இன்றைய இணையநாணயம்போல
சந்திரமோகன்