அன்புடன் ஆசிரியருக்கு
இன்றைய கிராதத்தின் அத்தியாயத்தை படித்தபோது ஒன்று புரிந்தது. வெண்முரசின் அத்தியாயங்கள் ஒவ்வொன்றும் ஒரு சிறுகதை. சிறுகதைக்குரிய கச்சிதத்துடன் அவை முடிகின்றன. நுண் தகவல்கள் வழியாக வணிகர்கள் விருந்தோம்பல் என சென்று கொண்டிருந்த இன்றைய அத்தியாயம் அர்ஜுனனில் வந்து முடிவது ஒரு தனிப்பட்ட உச்சமாக எனக்குத் தோன்றுகிறது. விளக்கத் தெரியவில்லை. இருந்தும் அப்படித்தான் தோன்றுகிறது. அவனில் வந்து முடிவதாலேயே அதுவரை சொல்லப்பட்ட தகவல்கள் வேறு பொருள் தருகின்றன.
அன்புடன்
சுரேஷ் ப்ரதீப்