Saturday, November 26, 2016

விஸ்வரூபனின் கதை



ஜெ\

விஸ்வரூபனின் கதை முன்னரே வெண்முரசில் வந்துள்ளது .அந்தக்கதையில் த்வஷ்டா இந்திரனின் சகோதரனாக இருக்கிறான். இந்தக்கதையில் எதிரியாக இருக்கிறான். கதைகளுக்குள் இவ்வளவு முரண்பாடு உண்மையில் புராணங்களுக்குள் இருக்கிறதா என்ன?

அப்படி இருந்தால் ஒரு கதையைத் திரும்பத்திரும்ப மார்றிக்கொண்டே இருந்திருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். அதாவது வேண்டியவர்கள் வேண்டாதவர்கள் என்பது மாறிக்கொண்டே இருந்திருக்கிறது

இந்தமாற்றம்தான் இப்போது மாறிமாறிச்சொல்லப்படும் கதையில் வெளிப்படுகிறதா ?

சந்திரசேகர்