அன்புள்ள
ஜெ,
வெண்முரசு
விரிந்துவிரிந்துசெல்கிறது. எந்த அளவுக்கு விரியும் என்பதே பெரிய வியப்பாக இருக்கிறது.
இப்போது மொத்தப்புராண உலகமும் எப்படி அசுரர் தேவர் என்னும் பைனரியால் பின்னி அமைக்கப்பட்டிருக்கிறது
என்பதைக் காட்டுகிறது. அந்தபைனரி ஒன்றோடொன்று எதிரியும் அல்ல. பல அசுரர்க்ள் தெய்வங்கள்
ஆனார்கள். பல தெய்வங்கள் அசுரர்களாகவும் இருந்தவர்கள்
இந்தக்கதையுடன்
ஒப்பிட்டுப்பார்க்கவேண்டிய பகுதிகள் வண்ணக்கடலில் வ்ருகின்றன. அங்கே இளநாகன் அசுரர்களின்
ஊர்களுக்குச் சென்று அவர்களின் களியாட்டங்களில் பங்கெடுக்கிறான். அவை உண்மையான சித்திரத்தை
யதார்த்தவாதக்கதை போல சொல்கின்றன. அதனுடன் அதில் வரும் பலவகையான நிஷாதர்களின் ஊர்களும்
இணைந்துகொள்கின்றன
இந்தியாவின்
வரலாறு ஒருபக்கமும் அதை ஒட்டி உருவான பௌராணிக அமைப்பு இன்னொருபக்கமுமாகத் தெளிவடைந்துகொண்டே
வருகின்றன
சாமிநாதன்