பாலைக்காட்சிகளை இன்றைய பகுதியில் ஜெ சார் விவரித்திருப்பது தான் எத்தனை அழகு?
//முள் மட்டுமேயாகி, கீழே வலையென நிழல்விரித்து நின்றிருந்த மரங்களுக்குள் மலர்செறிந்ததுபோல் நூற்றுக்கணக்கில் சிறிய குருவிகள் அமர்ந்து சலங்கைகள் குலுங்குவதுபோல் ஒலி எழுப்பி பேசிக்கொண்டிருந்தன. காலடியின் ஓசை கேட்டு அவை காற்று அள்ளி வீசிய மலர்கள் என எழுந்து சுழன்று பறந்து அமைந்தன. தொலைவில் வண்ணப் பட்டுத்துவாலை ஒன்று பறந்தலைவதெனத் தோன்றியது.//
இலையே இல்லாத பாலை மரத்தின் நிழல் அபப்டி வலை விரித்தது போலவே தானே இருக்கும்?
அந்த பறவைகளின் ஒலி சலங்கைகள் குலுங்குவது போல என்கிறார். அதை காதில் கேட்கக் கூட முடிகிறது வாசிக்கையில். அவை காலடிஓசை கேட்டுப்பறக்கையில் அள்ளி வீசிய மலர்கள் போல என்கிறார்!! பாலை நிலத்தின் வெறுமையைத்தான் பலர் எழுதி இருக்கிறார்கள் . இன்று சார் அதன் உயிரோட்டத்தை மிக அழகாக சொல்லி இருக்கிறார்
லோகமாதேவி