Saturday, November 26, 2016

விருத்திரன்



அன்புள்ள ஜெ

விருத்திராசுரனைப்பற்றிய கதை ரிக் வேதத்திலேயே உள்ளது என்று சொல்லப்படுகிறது. அந்தக்கதை காலந்தோறும் வளர்ந்து கொண்டே வந்துகொண்டிருக்கிறது. விருத்திராசுரன் ஒரு தீய சக்தியாக வேதங்களிலே இல்லை. இந்திரன் விருத்திரனை கொன்றதை வேதம் வாழ்த்துகிறது. அதேசமயம் விருத்திரனையும் வணங்குகிறது. அவன் அடைந்த சக்திகளைப்போற்றுகிறது.

பின்னர்தான் படிப்படியாக விருத்திரனை அசுரர்களில் மூத்தவன் என்றும் தீயவன் என்றும் சொல்லும் கதைகள் வந்தன. ஆரம்பத்தில் விருத்திரனின் தந்தையாகிய த்வஷ்ட ஒரு அசுர பிரஜாபதியாகவே சொல்லப்படுகிறார்

மிகப்பெரிய குழப்பம் இதில் உள்ளது. விருத்திரனை எப்படி விவரிக்கப்போகிறீர்களென்று பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த மொத்தக்குழப்பத்தையுமே சிக்கலான கதைப்பின்னலாக ஆக்கி எப்படி இதெல்லாம் ஊடுபாவாகப்பேசப்பட்டது என்பதைக்காட்டிவிட்டீர்கள்

மனோகரன்