அன்புள்ள ஜெ
வெண்முரசின் இந்த நாவல் கிட்டத்தட்ட மனநோயின் அத்தனை இடங்களையும்
தொட்டுப்பார்த்துவிடும் போலத் தெரிகிறது. மனநோய் என்று நான் ஒரு பேச்சுக்குச் சொல்லவில்லை.
உன்மையிலேயே ஒரு வகையான மனச்சிக்கலைத்தான் இந்நாவல் எனக்கு அளிக்கிறது. அனேகமாக ஒவ்வொருநாளும்
ஒருவகையான சோர்வுடன் தான் ஆரம்பிக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வேகம் விறுவிறுப்பு.
எங்கிருக்கிறேன் என்றே தெரியாத நிலை
ஏன் இந்த நாவலை இப்படிச்சொல்கிறேன் என்றால் மனநோய் என்பதே
ஒரு வகையான மாற்றுநிலைதானே? ஒருவகையாக உலகை அறிகிறொம் . நோல் விழுந்தால் இன்னொரு மனநிலையில்
வேறுவிழிகளால் உலகை அறிகிறோம் இல்லையா? நான் 2 மாதம் கால் ஒடிந்து ஆஸ்பத்திரியிலே கிடந்தேன்.
அன்றைக்கு அறிந்த உலகமே வேறு. அதைத்தான் மனநோயிலும் பார்க்கமுடியும்/ வேரு ஒரு உலகம்.
அதை காணுவதுபோல உள்ளது இந்நாவல்.
அர்ஜுனனின் ஆழுலகப்பயணங்கள் கொடூரமான அழகியலுடன் உள்ளன
செந்தில்குமார்