Tuesday, November 22, 2016

வருணதரிசனம்


ஜெ

இன்றைய அத்தியாயம் அப்படியே கவிதையாக எழுந்துவிட்டது. தாகத்தின் உச்சத்தில் மரணத்தின் கடைசிக்கணத்தில் நீரை அர்ஜுனன் அறிகிறான். வருண தரிசனம் இதுதானே


நீர் ஒரு வாக்குறுதி. 
ஒரு கருணை. 
ஒரு பேரருள். 
நீரென்றாகியது பருவெளியின் கனிவு. 
கற்பாறைகளும் கடுமண்ணும்
அளிகொண்டல்லவா நீர்மையென்றாகின்றன? 
முலையென ஊறுவது 
அன்னையின் சித்தம் கொண்ட உறுதி. 

அருத்தகணம் மேலும் துல்லியமாக வருணனின் கனிவை அவன் அறிகிறான். வருணனை மழயிலும் கடலிலும் காணாமல் பாலையில் ஏன் காண்கிறான் என்பதற்கான விளக்கமாகவே இது அமைந்துள்ளது

கொலைக்கூர் வெண்தேற்றை கொண்ட பெரும்பன்றியின் 
முலைக்கொத்துக்களில் வெண்ணிறத்துளி என ஊறி நிற்பதும் அவ்வெண்தேற்றையென தன்னை எழுப்பிக்கொண்டதே  அல்லவா?


ஜெ