Friday, November 18, 2016

எட்டு முகங்கள்

]

அன்புள்ள ஜெமோ

இந்திரநீலம் இப்போதுதான் வாசித்துக்கொண்டிருக்கிறேன். அதை ஒரு அபாரமான ப்ளென்ட் என்று சொல்வேன். கிருஷ்ணனின் சாகசங்கள் எல்லாம் ஒரு அட்வெஞ்சர் ஃபேண்டஸி நாவல் போல உள்ளன. நாயகியரும் செவிலியரும் கொள்ளும் உணர்ச்சிகள் வேறு ஒரு தளத்தில் தமிழ்ப்பழைமையில் உள்ள கவித்துவமான ஃபேண்டஸியுடன் உள்ளன. சாத்யகியின் சாகஸமான உலகம் தனி. இவை இணைந்து ஒரு நல்ல கட்டுமானத்தை உண்டுபண்ணுகின்றன . 8 பெண்களை கிருஷ்ணன் மணந்துகொண்டது கதை. ஆனால் தொகுப்பாகப்பார்த்தால் கிருஷ்ணனின் எட்டு முகங்கள். அந்தக்கடைசி இடம் அபாரமான காவியமுடிச்சாக இருந்தது

ஜெயக்குமார்