Thursday, November 17, 2016

குபேர புராணம்




ஜெ

அரசன் மொழியாக்கம் செய்த முழுமகாபாரதத்தில் குபேரன் அர்ஜுனனுக்கு அந்தர்த்தான அஸ்திரம் அளிக்கும் இடம் இவ்வளவே:

கைலாசத்தின் உயரங்களில் தனது இல்லத்தைக் கொண்டுள்ள கருவூலத் தலைவன் {குபேரன்}, "ஓ பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, உன்னுடனான எனது இந்தச் சந்திப்பு, கிருஷ்ணனை நான் சந்தித்தது போன்ற மகிழ்ச்சியை எனக்குக் கொடுக்கிறது. ஓ இடது கையால் வில்லைத்தாங்குபவனே, ஓ பலம்வாய்ந்த கரங்களுடையவனே, நீ முன்பு (மற்ற தேவர்களைப் போல) நித்தியமான தேவனாக இருந்தவன். பழங்கால கல்பங்களில், நீ தினமும் எங்களுடன்  தவச்சடங்குகளில் ஈடுபட்டுள்ளாய். ஓ மனிதர்களில் சிறந்தவனே, நான் உனக்கு தெய்வீகப் பார்வையைத் தருகிறேன். ஓ பலம்வாய்ந்த கரங்களுடையவனே, நீ ஒப்பந்த தைத்தியர்களையும் தானவர்களையும் கூட வீழ்த்துவாய். நேரத்தையிழக்கமால், என்னிடமிருந்தும் நீ ஒரு தெய்வீக ஆயுதத்தைப் பெற்றுக் கொள். இதைக் கொண்டு நீ திருதராஷ்டிரனின் படைகளை வீழ்த்த முடியும். எனக்குப் பிடித்தமான இந்த அந்தர்த்தானாயுதத்தைப் பெற்றுக் கொள். சக்தியும், பராக்கிரமும், பிரகாசமும் கொண்ட இந்த ஆயுதம் எதிரிகளைத் தூக்கத்தில் ஆழ்த்தும் வல்லமைபெற்றது. சிறப்புமிக்க சங்கரரால் {சிவனால்} திரிபுரம் அழிக்கபட்ட போது, பெரும் பலம் வாய்ந்த அசுரர்கள் இந்த ஆயுதத்தாலேயே உட்கொள்ளப்பட்டார்கள். ஓ ஒப்பற்ற வீரம் கொண்டவனே, உனக்கு கொடுப்பதற்காக நான் அதை எடுக்கிறேன். மேருவைப் போன்ற கண்ணியம் பொருந்திய நீ, இதைத் தாங்குவதற்குத் தகுதி வாய்ந்தவனே" என்றான். இந்த வார்த்தைகள் பேசப்பட்ட பிறகு, பெரும் பலம் பொருந்திய குரு இளவரசனான அர்ஜுனன், குபேரனிடம் இருந்து அந்த தெய்வீக ஆயுதத்தை முறைப்படி பெற்றுக் கொண்டான். - See more at: http://mahabharatham.arasan.info/2013/12/Mahabharatha-Vanaparva-Section41.html#sthash.R2erUfmg.dpuf

அதை ஒரு முழுமையான புராணக்கதையாக விரிவாக்கம் செய்திருக்கிறீர்கள். அர்ஜுனன் யமபுரி சென்றது பாகவதக்கதை மற்றும் கருடபுராண விரிவாக்கம். இது எது என தெரிந்துகொள்ளலாமா?

சாது அருணாச்சலம்

அன்புள்ள சாது

இது எதிலும் உள்ளது அல்ல. புராணம் என்பது தனக்குரிய ஓர் அழகியல்மரபை கொண்டுள்ளது. 18 ஆம் நூற்றாண்டுவரை அந்த மரபை ஒற்றி புதிய புராணங்கள் உருவாகிக்கொண்டே இருந்தன.  இது அவ்வகையில் ஒரு நவீன புனைவு

ஜெ