ஜெ
இதுவரை வெண்முரசில்
வந்த கதாபாத்திரங்களிலேயே முக்கியமான கதாபாத்திரம் உக்ரசிரவஸ் சௌதி. மகாசூதர் என்று
புராணம் அவரைப்பற்றிச் சொல்கிரது. சூததேவர் என்று நிறைய நூல்களில் இருக்கிறது. நைமிசாரண்யத்திலே
கூடியிருந்த ரிஷிகளுக்கு மகாபாரதக்கதையையும் அதை விரித்து எழுதிய நால்வரையும் முதலில்
அதை இயற்றிய வியாசரையும் சொல்லி இப்போது நாம் அறியும் மகாபாரதத்தை இயற்றியருளியவரே
அவர்தான்.
ஆனால் அவ்வளவு பெரியவர் ஒரு சூதராக இருக்கமுடியாது
என புரானப்பிரசங்கிகள் சிலர் சொல்வர். அவர் சூததேவர் என்ற ரிஷி சூத சாதியினர் அல்ல
என்று கிருஷ்ணபிரேமி பேச்சிலெ சொன்னார். பாலகுமாரன் கூட அவருடைய மகாபாரத நூலிலே சூதர்
என்ற பெயருள்ள ரிஷிஎன்றுதான் சொல்கிரார்.
அந்த மகாசூதரை
ஒரு 3 வயதுக்குழந்தையாக அறிமுகம் செய்ததில் இருக்கும் அழகு மனசைக்கொள்ளைகொள்கிரது.
இவ்வளவு பெரிய கதையை நினைவிலிருந்தே பாடியவர் குழந்தைமேதையாகத்தான் இருந்திருக்கமுடியும்.
அவரை ஜைமினி தோளிலே ஏற்றிக்கொண்டது பொருத்தம்தான். அவர்தான் ஆசாரப்பிராமணர் இல்லையா?
சிவக்குமார்