Monday, January 2, 2017

மொழியில் வாழ்பவர்






ஜெ
உக்கிரஸ்ரவஸை நான்கு வைதிகர்களும் சந்திப்பதும் அவருடன் அவர்கள் கொள்ளும் விளையாட்டும் குழந்தையின் கதாபாத்திரமும் அருமையாக உள்ளன. கதையைச் சொல்ல அவருக்கு தூண்டுதல் உருவாகும் விதம் ஆச்சரியம். ஒரு சொல்தான் அவரைத் தூண்டி பாடவைக்கிறது. அவருடைய சப்கான்ஷியஸ்தான் பாடுகிறது. கான்ஷியசாக அவர் ஒரு சின்னக்குழந்தைதான். 

அவருடைய குணாதிசயத்திலேயே ஒரு மூர்க்கமும் உள்ளது. அவர் அடிப்பதும் பிடிவாதம்பிடிப்பதும் முக்கியமானா விஷயங்கள். அதோடு உண்மையிலேயே அவருக்கு கற்பனைதான் உலகமகா இருக்கிறது. அவர் காக்காய்களுடன் பேசுகிறார். பேசுவதாகவே நினைக்கிறார்/. இந்த உலகில் இருந்தாலும் அவர் மொழியில்தான் திளைத்து வாழ்ந்துகொண்டிருக்கிறார் என நினைக்கிறேன். நுட்பமாகச் செதுக்கப்பட்ட அருமையான கதாபாத்திரம் அது

சித்ரா