Wednesday, July 8, 2020

நிறைவில்


அன்புள்ள ஜெ,

நலம்தானே? நானும் நலமே. குருபூர்ணிமாவின் நிகழ்ச்சிகளை தாமதமாகப் பார்த்தேன். அலுவல்கள் இருந்தமையால் கவனிக்க முடியவில்லை. பலரும் உணர்ச்சிகரமாக இருந்தனர். ஏராளமான கேள்விகள் அவற்றுக்கு விரிவாகவே பதில்களை அளித்தீர்கள். கிட்டத்தட்ட ஏழுமணிநேரம் நிகழ்ந்த நிகழ்ச்சி மிக நிறைவூட்டுவதாக அமைந்தது.

நான் வெண்முரசை 2018ல் தான் வாசிக்க ஆரம்பித்தேன். ஒரு வெறியுடன் முழுவீச்சில் வாசித்து முடித்தேன். இப்போது தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கிறேன். புத்தகமாக வாசிக்கையில் நாளெல்லாம் நாவலிலேயே அமிழ்ந்திருக்கமுடிகிறது. நாவல் அளிப்பது ஒரு நிலம், மக்கள், வாழ்க்கை எல்லாம். ஆகவே எங்கே இருக்கிறோம் என்பதே தெரிவதில்லை. நாம் ஏதோ அயலூரில் வேறொரு காலத்தில் வாழ்வதுபோல இருந்தது. நாள்தோறும் படிக்கும்போது அந்த கனவு அனுபவம் கொஞ்சம் குறைகிறது

முடிந்தபிறகு ஆரம்பத்திலிருந்து படித்துவரவேண்டும் என்று நினைத்துக்கொள்கிறேன்

 

ஜெயக்குமார் மாணிக்கம்