Monday, November 7, 2016

சேட்டையின் அருள்






அன்புள்ள ஜெ

மலையிறங்கி வரும்போது கடைசியாக அர்ஜுனன் உதிர்த்தது பசியை. அதற்கு முன்பு காமத்தை. அதற்கு முன்பு சொல்லை. அதற்கு முன்பு ஐஸ்வரியத்தை. அதற்கு முன்பு பீடையை

அந்த வரிசைப்படி அவள் கடைசியாக வந்து பிடிக்கிறாள். அவள் இல்லாமல் மற்றநாலும் இல்லை என்கிறாள். அதாவது துறவுபூண்டால் தான் அவள் விட்டுச்செல்கிறாள். மாசற்ற ஐஸ்வரியம் வருகிறது

மற்ற லௌகீகர்களுக்கு பீடையும் ஐஸ்வரியமும் கலந்துதான் வருகிறது. பீடைதான் ஆணவம் அகங்காரம் வீரம் எல்லாம்

சோதிடர்கள் பீடையை ஒரு நல்ல தெய்வமாகச் சொல்வோம். சாமானியர் புரிந்துகொள்ளவே மாட்டார்கள். எனக்கே இப்போதுதான் புரிகிறது

தியாகராஜன் சாமிவேல்