Sunday, November 6, 2016

குலம் பழித்தல்






ஜெயமோகன் சார்

வெண்முரசின் கவற்சி என்பது அதில் கதையோட்டத்தை மீறி வந்து பேய் மாதிரி நின்றுகொண்டிருக்கும் அபாரமான வரிகள். அவற்றை நினைத்து நினைத்து அந்த நாளே ஓடிப்போய்விடும். பிறகு எப்போதாவதுதான் மொத்தக்கதையையும் தொகுப்பதுபோல இந்த வரிகளையும் தொகுக்கவேண்டும்

மூதாதையரை வெல்லாதவனுக்கு புதிய வழிகள் இல்லை. குலம்பழிக்க வாழ்பவர்களுக்குரியது தெய்வங்களின் படைக்கலம்

என்ற வரியைத்தான் இன்றைய டேக் என்று சொல்லுவேன். எத்தனை முறை அந்த வரிகளை வாசித்தேன் என்றே தெரியவில்லை. எங்கள் குடும்பத்தில் ஒருவர் சாமியாராகப்போய்விட்டார். அவரை எங்கள் குடும்பத்தில்  பழிக்காதவரே இல்லை.

நானும்  ஓரளவு குலம்பழிக்க் வாழ்பவன் தான். எனக்கும் தெய்வங்களின் படைக்கலம் கிடைக்கும் என்று நம்புகிறேன்

ஜெயராமன்