ஜெ,
வெண்முரசில் இதுவரை எவ்வளவோ கதைகள் வந்துவிட்டன. ஆனால் ஒவ்வொருமுறையும் கற்பனையைச் சிறகடிக்கவைக்கும் புதிய ஒரு கதையும் வந்துகொண்டே இருக்கிறது. ஊர்ணநாபனின் கதை அப்படிப்பட்ட ஒன்று. ஊர்ணநாபன் என்னும் சிலந்தி அந்த மக்களை அப்படியே கட்டிவைத்திருக்கிறது. ஆனால் அவர்கள் அதை வெறுக்கவில்லை. அடிமையாக இருப்பது வாழ்க்கைக்கு அர்த்தமும் பாதுகாப்பும் ஆக இருக்கிறது. அப்பா இருக்கும் வரை குடும்பம் நிம்மதியாக இருக்குமே அதுபோல.
ஊர்ணநாபனை இந்திரன் கொன்றதும் அந்த குலத்துக்கு வரும் துக்கமும் அவர்கள் ஊர்ணநாபனின் இடத்தை தங்கள் கூட்டு அடையாளம் மூலம் நிரப்பிக்கொள்வதும் சிறப்பான கதைச்சித்தரிப்பு. உண்மையில் இன்றுவரை நீண்டுவரும் அரசியலை புரிந்துகொள்ள மிகமிக உதவியானது. உண்மையில் ஜெயலலிதா இறந்தபோது அழுதுபுலம்பிய பெண்களும் ஆண்களும்தான் எனக்கு ஞாபகம் வந்தார்கள்
செந்தில்குமார்