ஜெ
இன்றைய வெண்முரசின்
ஆச்சரியம் ஊர்ணநாபனின் எழுச்சி. அந்த அரக்கன் அம்மக்களை அடிமைப்படுத்தி ஆட்டிவைத்தான்.
அவர்கள் இந்திரனால் விடுவிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் அவனை மூதாதையாகவும் தெய்வமாகவும்
எண்ணி துயரடைந்தனர். விடுதலையை அனுபவிக்க அவர்களுக்குத்தெரியவில்லை. மீண்டும் தங்களைத்தாங்களே
கட்டிக்கொண்டார்கள். ஆனால் அவர்களை மீண்டும் கின்னரர்கள் விடுவித்தார்கள். தனிமனிதர்களாக
ஆக்கினார்கள். வாழ்க்கையை அளித்தார்கள். அவர்கள் கின்னரர்களை தெய்வமாக ஆக்கிக்கொண்டார்க்ள்.
ஊர்ணநாபன் அசுரனாக அவர்களின் காலடியில் கிடக்கிறான்.
ஆனால் மீண்டும் ஆழத்தில் ஊர்ண்நாபன்
தெய்வமாகவும் இருக்கிறான். அவனே இவர்களின் பூசாரியின் ஆழ்மனமாக இருக்கிறான் எத்தனை அடுக்குகளாக
இது சென்றுகொண்டே இருக்கிறது என நினைக்கும்போது பிரமிப்புதான் ஏற்படுகிறது.விருத்திராசுரனை
பற்றியகதையைப்புரிந்துகொள்ள இது மிகவும் உதவுகிறது . அசுரர் என்ற கருத்தையே புரிந்துகொள்ளமுடிகிறது.
மனோகர்