ஜெ
ஊர்வசியை புரூரவஸாகச் சென்று பீமன் கடந்தகாலத்தில் நுழைந்து சந்திக்கும் இடத்திலுள்ள அந்த ஆம்பிகுடியை வெகுவாக ரசித்தேன். ஒரு மனமயக்கத்தில் புரூரவஸ் இருக்கிறான். பீமன் இங்கிருந்து அங்கே சென்று அதை நடிக்கிறான் என்றால் புரூரவஸின் மனக்குழப்பம் எதிர்காலத்திலிருந்து ஒரு கொள்ளுப்பேரன் வந்து மனதுக்குள் உட்கார்வதுதான்
யோசித்துப்பார்த்தால் இது வெறும் ஃபேண்டஸியாக இல்லாமல் யதார்த்தமாகவும் இருக்கிறது. நம்செயல்களை நாளை என்ன சொல்வார்கள் என்று நாம் நினைக்கும்போது நம்முடைய வழித்தோன்றல்கள் தீர்மானிக்கத்தானே செய்கிறார்கள்?
சரவணன்