ஜெ
பீமனை திரௌபதியும் தம்பிகளும் சேர்ந்து குளிப்பாட்டும் காட்சி அபாரமான ஒரு வர்ணனை எத்தனை வாசித்தபோதும் அதை கடக்க முடியவில்லை. தூய அன்பின் சித்தரிப்பு இது. தர்மன் கண்படக்கூடாதே என்று ரத்தம் வரவழைப்பதும் அவர்கள் சேர்ந்து அமர்ந்து மண்ணில்விழுந்த சோற்றை உண்பதும் அற்புதமான இடங்கள். அன்பில் நெகிழ்ந்திருக்கிறார்கள் அவர்கள். காட்டில் அவர்கள் வாழ்ந்ததனால்தான் அதிகாரம் போட்டி பொறாமை ஒன்றுமே இல்லாமல் மிகமிக எளிமையாக இதையெல்லாம் அடைந்திருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டேன்
செல்வராஜ்