Wednesday, February 8, 2017

நொதி



brewing technology, fermentation microbiology என்றெல்லம் சில வருடங்களாக பாடம் எடுக்கிறேன். இன்றைய பகுதியின் வடித்தல் ,நொதித்தல், பழத்தேறல்,வாற்று, கதலிப்பழங்களையும் தேனையும் நெல்லியையும் சேர்த்து எடுக்கும் மது என்பதெல்லாமே மிகபுதிய அறிவியலாக இருக்கிறது.  மது வகைகள் 18ம் அதற்கு மேலும் இருக்குமென்றாலும் மது அருந்திய பிறகு மனிதர்களும் குரங்குகளும்மெல்லாம் ஒன்று போலவேதானே இருக்கிறார்கள் அதிலொன்றும் வித்தியாசமில்லை !

 5 நாட்களாக ஒரே கொண்டாட்டமும் சேட்டையும் உறவுப்பிணைப்புகளுமாய் இருந்து விட்டு,இன்றென்னவோ திடீரெனெ தேவியைக்காணாமல் கொண்டாட்ட மனநிலையில் இருந்து திடீரெனெ கீழே இறக்கிவிட்டுவிட்டது இறுதிப்பகுதி
லோகமாதேவி