மஹாபாரதத்தில்
பல இடங்களில் உன்னதமான அன்பு திரிந்து நிலைமாறுவதை விரிவாக
எழுதியிருப்பீர்கள். மாமலரிலும் அப்படி ஓரு பகுதி வருகிறது. அவற்றைப்
படிக்கும்போது எப்படி இது சாத்தியம் என்று வியந்திருக்கிறேன். எண்ண
ஓட்டத்தில் அவற்றை ஒப்புக்கொள்ளாமல் கடந்து சென்றிருக்கிறேன். ஆனால்
சமீபமாக நிஜ வாழ்க்கையில் அப்படி ஒரு உணர்வை அளித்த கணத்தைச் சந்தித்தேன்.
பின்னர் மிகைநாடி மிக்கக் கொண்டு மேற்சென்றாலும்,
அதிர்ந்து நின்ற அக்கணத்தில்
உங்கள் வரிகள் மனதில் எழுந்தன. அப்படி அமுதம் நஞ்சாகும் கணத்தை எப்படிக் கண்டடைந்தீர்கள்?
உங்கள் எழுத்துக்கே உரிய சிந்தனை
வீச்சா அல்லது அனுபவமா? எப்படியேனும்
அந்த கணத்தின் நிஜத்தில் நான் திகைத்துப்போனேன். இந்த உணர்வு மாறுபாட்டை விளக்கமுடியுமா?