Saturday, February 4, 2017

இணைப்புகள்



ஜெ

வெண்முரசு மமாலரின் போக்கு மிக வேறுபட்டிருக்கிறது. முந்தைய மூன்றுநாவல்களும் அடர்த்தியும் தீவிரமும் மிகுந்தவையாக இருந்தன. இந்நாவல் முற்றிலும் மாறாக இருக்கிரது. எளிமையாக ஆரம்பித்து சரளமான கதையாக முன்னால்செல்கிறது. அற்புதமான தொடக்கம். ஆழமான விவாதங்கள் ஒன்றும் இல்லை என்றாலும் இனிமையான காட்சிகளாகச்சென்றுகொண்டிருக்கிறது. என்ன நடக்கிறது என்று மட்டுமே வாசித்தால் இது சாதாரணமாகத்தெரியும் என நினைக்கிறேன். என்ன பேசப்படுகிறது, அதற்கு என்ன நடக்கிரது என்பதற்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை கொண்டு தொடுத்து யோசிக்கவேண்டும் என நினைக்கிறேன்

உதாரணமாக தருமன் சலிப்பைப்பற்றி பேசுகிறான். இருப்பதென்பதே சலிப்பு என்கிறான். ஆனால் மிருகங்களுக்குச் சலிப்பே இல்லை. மிருகம்போல சலிப்பில்லாமல் ஆட்டம்போடுகிறான் பீமன். இந்த இணைப்புதான் நாம் யோசிக்கவேண்டியது

மகேஷ்