அன்புள்ள ஜெ
வெண்முரசு, விக்கிப்பீடியா பக்கம் நீக்கம் பற்றி தாங்கள் வருத்தமாக குறிப்பிட்டுயிருந்தீர்கள்.இவ் வளவு கவலைப்பட ஒன்றுமில்லை. தாங்களுக்கு தமிழ் இலக்கிய உலகில் தலைமைபீடம் வழங்கப்பட்டு விட்டது.அது இனி தவிர்க்க இயலாதது.
வெண்முரசு
பெரும் உழைப்பு தான் அது தமிழ் இலக்கிய உலகில் வாசகர்பரப்பில் எவ்வளவு
கவனிக்கப்படும் என்று தாங்கள் அறிவீர்கள் ஏனெனில் ஒவ்வொரு நாவலும் ஒரு
தலைகாணி.இன்று கவனிக்கப்படுவதை எண்ணியா தாங்கள் எழுத துவங்குனீர்கள் ??? இன்னும
100 வருடம் கழித்து இது கவனிக்கப்படும். சினிமாப்படங்களோடு வெண்முரசை
ஒப்பிடுவது உவப்பானதல்ல.அதற்கெல்லாம் வருந்துவதும் தங்களுடைய இடத்தில்
இருந்து அது தகுதியானதல்ல.
காலமும் தமிழ் இலக்கிய உலகும் உங்களுக்கு ஒரு ஞானகீரீடம் வழங்கிவிட்டது
அதுவே ஜெயமோகன் என்ற எழுத்தாளனுக்கு பெரும் வெற்றி
இனி அதை தினமும் வாசகர் கடிதம் வெளியிட்டு ஊர்ஜிதப்படுதததேவையில்லை
இந்த நூற்றாண்டின் பெரும் எழுததாளன் தாங்கள்
தமிழகத்தின் கேரளத்தின் ஏன இந்தியாவின் மிக்பெரிய அறிவுத்தளம் தாங்கள்
அந்த நிறைவோடு பூர்ணம் கொள்ளுங்கள்
உங்களின் சிறு புன்முறுவல் போதும் உங்களை சுற்றி நடக்கும் அனைத்துக்கும்.
அன்புடன்
வசந்தபாலன்