பகடி என்ற பெயரில் உண்மைகளை பேசிக்கொண்டிருக்கும்முண்டனின் பாத்திரம் பகடிக்காக மட்டுமிருக்காது என்றே தோன்றுகிறது.
முற்றத்தின் ஒளி கன்னத்தில் ஒளிர கண்ணில் நீரும் நெஞ்சில் காதலுமாய் நிறைந்து நிற்கும் திரெள்பதியை திரும்பிப்பார்பதே அத்துமீறல் என்று நினைக்கிறார் தருமர் . இந்த வரி தருமராகவே இருந்துதான் எழுதி இருப்பார் ஜெ என்றெண்ணிக்கொண்டேன். எத்தனை நுட்பமான வரி?
லோகமாதேவி