Monday, February 27, 2017

விட்டுச்செல்லுதல்




 ஜெ

சர்வசாதாரணமாக ஓர் உரையாடலாக வந்த வரிகள் இவை. ஒரு செறிவான கவிதை. விட்டுச்செல்ல எல்லாரும் எண்ணுகிறார்கள். அதைப்பற்றிய ஒரு பெரிய அறிதல் அமைந்த கவிதை இது

விட்டுச்செல்லுதல்

முதற்காலையில் காற்று அகல்வதுபோல்
 உகந்த அனைத்திலிருந்தும் செல்லவேண்டும்

திரும்பி ஒருகணம் நோக்க விழைந்தால்
 ஓங்கி ஒரு மூச்செடுத்தால்
ஒரு விழிநீர்த்துளி உதிர்ந்தால்
செல்லுதல் எவ்வகையிலும் பயனற்றது.
அவை விதைகள்.
நாளுக்கு நாளென முளைத்து காடாகும்
 வல்லமை கொண்டவை.
பின்பு அப்பெருந்துயர் முளைத்த அடர்காட்டில்தான்
குடியிருக்க வேண்டியிருக்கும்


செல்வது மிக எளிது.
மீண்டு வராமல் செல்வது அரிதினும் அரிது.
 செல்பவன் மீண்டும் வருகையில்
விட்டுச்சென்ற எதையும் காணமாட்டான்.
முழுதாக செல்லாதவன் அடைவதுமில்லை.
விட்டவற்றை மீளப்பெறுவதுமில்லை

*

இந்த வரிகளை எத்தனையோ முறை வாசித்தேன். வெண்முரசு கதைதான். ஆனால் அதனுள்ளே பல்லாயிரம் கவிதைகள் உள்ளன

மனோகரன்