தோல் என்று ஒன்றைப் படைத்த பிரம்மன் மானுடரின் உள்ளுறுப்புகளை பிறர் பார்க்கலாகாதென்று எண்ணினான் என்பது தெளிவு. பாண்டவரே, மொழியென்று ஒன்றை படைத்த கலைமகள் மானுடரின் உள்ளத்தை பிறர் காணலாகாதென்று எண்ணினாள் என்றே கொள்க!
வெண்முரசில் என்னை அதிரச்செய்த வரி இது. தோல் மறைக்கிறது. ஆனால் அதன்வழியாகவே உள்ளிருப்பவன் உலகை உணர்கிறான். அவனுக்கு வடிவம் அளிப்பது தோல்.
மொழி மறைக்கிறது. ஆனால் வெளியே இருப்பதெல்லாம் மொழிவழியாகவே தெரியவருகிறது. சிந்தனைகளுக்கு வடிவம் அதுவே
கணவனும் மனைவியும் சேர்ந்து மனிதனை படைக்கிரார்கள்
சாரங்கன்