மாமலர் அழகாக விரிகிறது. இன்றைய அத்தியாயம் அதன் உச்சம். ஒரே ஒரு அத்தியாயத்திற்குள் எத்தனை நுட்பமான மனோவியல் நாடகங்கள் நிகழ்கின்றன என்று எண்ணிப்பார்த்தால் காமத்தையே பெரிதும்பேசிக்கொண்டிருக்கும் நம் நவீன இலக்கியத்தில் இதைப்போல எங்காவது பேசப்பட்டிருக்கிறதா என்று கேட்கத்தோன்றுகிறது.
பிரகஸ்பதி சந்திரன் தாரை கதை புராணங்களில் உள்ளதுதான். ஆனால் பிரகஸ்பதி கொள்ளும் கொந்தளிப்புகளும் வேடங்களும் பலமுறை வாசிக்கவைத்தன. அவளுடைய ஆடைகளை அணிந்துகொண்டு அவளாக ஆகி அவள் மனதை அவர் அறியும் இடமும் அவள் திரும்பி வந்தபின்னர் தன்னை தியாகியாக ஆக்கிக்கொண்டு அதைக் கடந்துசெல்வதும் ஒருவகையான படபடப்பைத்தான் அளித்தன. அந்த இடங்களை விரும்பி வாசிக்கமுடியவில்லை. ஆனால் இதுதான் உண்மை என்று தோன்றிக்கொண்டே இருந்தது
சாரங்கன்