Saturday, February 18, 2017

தரிசனம்





எல்லா மனிதர்களுக்கும் மிக இளம் வயதில் ஒரு துயரமான அனுபவம் வந்திருக்கும். மரணத்தையோ கொலையையோ அதைப்போல எதையாவது ஒன்றையோ பார்த்திருப்பார்கள். அது ஏன் என்று கேட்டுக்கேட்டு உள்ளம் மாய்ந்துபோகும். அதன்பிறகு கொஞ்சம்கொஞ்சமாக அவர்களே தேறி அதற்கான பதிலைக் கண்டுகொள்வார்கள். அதுதான் வாழ்க்கைப்பார்வையாக அமையும்

அப்படி ஒருபதிலைத்தான் புரு ரவஸ் கண்டுகொள்கிறான். அந்த மீனின் சாவு அப்படி பாதிக்கிறது. அதன் அழகும் துள்ளலும் வெறும் சாப்பாடாக மாறிவிடுவதற்காகத்தானா? ஆனால் அவனே பதிலைக் கண்டுகொள்கிறான். அது அவனுக்கு ஒரு விடுதலையை அளிக்கிறது. அவனை அறச்செல்வனாக ஆக்குகிறது

எனக்கு மிகவும் சின்னவயதில் இதேபோல ஒரு அனுபவம். ஒரு சின்னப்பையனை அவன் அப்பாவே அடிஅடி என அடிப்பதைப்பார்த்தேன். அது என்னை மிகவும் பாதித்தது. இன்றுவரை அதிலிருந்து நான் விடுபடவே முடிந்தது இல்லை

ஜெயராமன்