ஜெ
வெண்முரசின் மாமலர் முற்றிலும் வேறு ஒரு திசையில் சென்றுகொண்டிருக்கிறது. முழுக்கமுழுக்க ஆண்பெண் உறவின் நுட்பங்கள். ஆனால் ஒரு நவீனப்படைப்பில் சொல்லும் ஒரு blatanat style இந்தமாதிரி கிளாஸிகல் படைப்புக்குச் சரிவராது. இதில் அப்பட்டமாகச் சொன்னால் அழகு குறையும். ஆகவே பலநுட்பமான உவமைகள் வழியாகச் சொல்லிச் செல்கிறீர்கள். அதில் அந்த மலர் மையமான metaphor ஆக எழுந்து வந்துகொண்டுள்ளது.
அதை விதவிதமாக ஒவ்வொரு சந்தர்ப்பத்துடனும் பொருத்தி அர்த்தம்கொள்ளவேண்டியிருக்கிறது. திரௌபதியைத் தேடிவரும் மணம். அதை பீமன் அறிகிறான். அதன்பின் தனக்கே அதைத்தெரிந்துகொள்ளும்பொருட்டுச் செல்கிறான். அவன் செல்வது அவனுடைய உள்ளத்துக்குள் மட்டும்தான். அங்கே அந்த மணம் என்ன அர்த்தம் கொள்கிறது என்பது மட்டும்தான் முக்கியம்
மனோகரன்