Wednesday, February 8, 2017

நன்னீராட்டு.



 
வெண் முரசில் வரும் நீராட்டு சித்திரங்களை மட்டுமே தனியாக வாசித்து பார்க்கலாம். முடிவற்ற வண்ண பேதங்கள் [தலையாயது திரௌபதியின் நீராட்டு] . திரௌபதி பீமனை அங்கே தொட்டு  சிஷ்ருஷை செய்துகொண்டிருக்க, இங்கே தர்மன் பீமனுக்காக குருதி சொட்டி கண்ணேறு கழிக்கிறார்.

குழந்தைகள் பண்டங்களை தரையில் சிதறடித்து,மீண்டும் அதையே எடுத்து உண்ணும் அழகு இன்றைய பீமனின் உண்ணும் அழகு.

திரௌபதி தனது ஆடை நுனி கொண்டு பீமனின் வாயை துடைத்து விடுகிறாள். 

இங்கே இத்துடன் இதை எழுத்தாளர் நிறுத்திக் கொண்டது அநியாயம்.  [பீமனை சொல்லிவிட்டான் ருசியில் திருப்தி என ஒன்றில்லை.] இன்னும் ஒரு பாரா எழுதி இருக்கலாம்.
 
சொல்புதிது சீனு