Friday, November 4, 2016

கிருஷ்ணனின் கனவு




அர்ஜுனனின் தவம் வெகு சுவாரஸ்யமாக இருந்தது . அவன் நினைவில் அவனது 1. தந்தை ஸ்தானத்தில் இருக்கும் அனைவரும் வருகிறார்கள் :)

  2. கிருஷ்ணனின் தத்துவம் சார்ந்து விருப்பம்  வெளிப்படும் தருணம் .கீதை!

இந்திரகீலம் ஏற துவங்கும் இடத்தில் , மனமின் விருப்பதைவிட உடலின் விருப்பம் ( அடுத்து , அடுத்து என மேல்நோக்கி செல்ல விரும்பும் உடலின் தன்னியல்பான உந்துதல் ) நகரத்தும் செயலூக்கம் அழகாக வெளிப்பட்டிருந்தது , 


தவத்தின் துவக்கத்தில் வரும் 'வலையிழையில் சிக்கு பிரித்தெடுத்து ஒழுங்காக்கும் மீனவனை போல ' என்ற உவமை மிக அழகானது  .

தவத்தின் அந்தியில் எண்ணங்கள் விலகி இன்மையில் நிலைகொண்ட பின்பு தன் விழைவை தேடும் இடமும் அழகானது . அதும் பெருவிளைவை , படைப்பை நிகழ்த்தும் வல்லமையை உணர்வது அல்லது உணரமுடியாத திக்கற்ற நிலை அடையும்போது அதை கைவிட்டு தன் விழைவை உணரும் இடம் ( சூதனின் சொல்லில் ) மிக பிடித்தது .

கிருஷ்ணன் உபவேதங்கள் வேதங்களின் கலைவடிவங்கள் என சொல்லி தொடரும் பகுதியையும் ரசித்தேன் . வேதத்தை ( இன்மையை ) அடைய கிருஷ்ணன் சொல்வழியாக தேடுவதையும் , அர்ஜுனன் வில் வழியாக தேடுவதையும் .


கிருஷ்ணன் அதில் முதிர்ந்து கனி( கீதை ) தரும் பருவம் எட்டிவிட்டதை உங்கள் சொல்வழியாக மிக ரசித்தேன் .

இதில் சஞ்சலமில்லாத விதுரரை கண்டேன் :) 
பாண்டுவிடம் அர்ஜுனன் கேட்கும் கேள்விகள் குழந்தை மனதிற்க்கே உரியவை :)

ராதாகிருஷ்ணன்